காஸாவில் 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்பு!
காஸாவில் 24 மணி நேரத்தில் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
காஸாசவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் 160 பேரின் உடல்கள் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக ஹமாஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோடர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடிய தாக்குதலில் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதில் 6,150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் பிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியது.
பாலஸ்தீன கடலோரப் பகுதியின் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 160 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 4 நாள் போர் நிறுத்தம் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கத்தார் அறிவித்துள்ளது.