For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முடிவானது பாஜக - தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு!

10:40 AM Feb 26, 2024 IST | Web Editor
முடிவானது பாஜக   தமாகா கூட்டணி  ஜி கே வாசன் அறிவிப்பு
Advertisement

“மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்” என ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுகவில் இன்னும் கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த பிறகே கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.

மேலும் அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு பாஜகவும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பாஜக கூட்டணியில் உள்ள  புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதே போல பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இன்று அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பு, பாஜக உடனான கூட்டணி குறித்த அதிகாரபூர்வ சந்திப்பாக இது இருக்கக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அவர் தெரிவித்ததாவது..

மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்.  பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாக முடிவு செய்துள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார்.

Tags :
Advertisement