Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்தது செல்லும்" - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

02:48 PM Nov 09, 2023 IST | Web Editor
Advertisement

”ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த
சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில்
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.

இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், இந்த சட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

வழக்கு குறித்த விசாரணையின் போது வாதங்கள் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக விசாரணையை தள்ளி வைத்திருந்தனர். வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

அதிர்ஷ்டத்துக்கான ஆன் லைன் விளையாட்டுக்களை தடை செய்தது செல்லும். திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்துள்ளது.   ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடுவதற்கான வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags :
banning online gamesMadras High CourtOnline GameONLINE RUMMY
Advertisement
Next Article