கவனம் பெறும் #Ace படத்தின் கிளிம்ஸ் வீடியோ!
விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2’ ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து, அவர் இயக்குநர் மிஷ்கினின் 'டிரெயின்' படத்தில் நடித்து வருகிறார். இதறகிடையே, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்கு 'ஏஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மணி வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார்.
Presenting a glimpse from #ACE ⚡https://t.co/q4GAwsDUQN@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @justin_tunes @iYogiBabu #KaranBRawat @andrews_avinash @rajNKPK @DivyaPillaioffl @Denes_Astro @yogeshdir @thinkmusicindia @sathishoffl @decoffl @proyuvraaj pic.twitter.com/HCY90rH3up
— VijaySethupathi (@VijaySethuOffl) January 16, 2025
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி, டிரைலர் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி ஏஸ் படத்தின் கிளிம்ஸ் வீடியோ படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.