Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”என் மீதான தாக்குதலானது ஒரு கோழைத்தனமான முயற்சி” - டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தன் மீதான தாக்குதல் ஒரு கோழைத்தனமான முயற்சி என்று கூறியுள்ளார்.
08:12 PM Aug 20, 2025 IST | Web Editor
டெல்லி முதல்வர் ரேகா குப்தா தன் மீதான தாக்குதல் ஒரு கோழைத்தனமான முயற்சி என்று கூறியுள்ளார்.
Advertisement

டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று முதல்வர் ரேகா குப்தாவின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள  இல்லத்தில் மக்கள் குறை கேட்பு நிகழ்வு நடை பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற ரேகா குப்தா மக்களின் குறைகளை கேட்டு வந்தார்.  அப்போது முதல்வர் ரேகா குப்தாவிடம் சில ஆவணங்களை கொடுப்பது போல வந்த  நடுத்தர வயதுடைய ஒரு ஆண் ஒருவர் திடீரென  முதல்வரை தாக்கினார். இதனால் ரேகா குப்தாவிற்கு சிறு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முதல்வருக்கு சிகிச்சை அளிக்கபட்டது.

Advertisement

முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய  நபரை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும்  டெல்லி காவல்துறை ராஜேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது. முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் ராஜேஷ் கிம்ஜி என தெரிய வந்துள்ளது.

மேலும் ராஜேஷ் கிம்ஜியின் தாயார்,  ராஜேஷ் கிம்ஜி ஒரு நாய் பிரியர் என்றும், டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் அளித்த  உத்தரவினால்  வருத்தமடைந்த ராஜேஷ் இதனை செய்துள்ளான். என்னுடைய மகன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் முதல்வரிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தன் மீதான தாக்குதல் ஒரு கோழைத்தனமான முயற்சி என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”இன்று காலை என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என் மீதான தாக்குதல் மட்டுமல்ல, டெல்லிக்கு சேவை செய்யவும், மக்களின் நலனுக்காகவும் பாடுபடவும் நாங்கள் எடுத்த உறுதியின் மீதான ஒரு கோழைத்தனமான முயற்சி.

இந்த தாக்குதலுக்குப் பிறகு நான் அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன். எனது அனைத்து நலம் விரும்பிகளும் என்னைச் சந்திக்க வருவதன் மூலம் தங்களைத் தாங்களே தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற தாக்குதல்கள் மூலம் எனது மனநிலையையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைக்க முடியாது. இப்போது, முன்பை விட அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் நான்  இருப்பேன்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற என் பணிகள் முன்பு போலவே அதே தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் தொடரும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :
cmattackcmrekhaguptaDelhilatestNewsstreetdog
Advertisement
Next Article