Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை | கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்!

06:54 AM Jun 11, 2024 IST | Web Editor
Advertisement

வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான 7 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு
8.30 மணிக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு வாணியம்பாடி சார் பதிவாளர்
அலுவலகத்தில் உள்ளே சென்று கதவை தாழிட்டு, அலுவலகத்தில் உள்ள
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை யாரையும் வெளியே விடாமல் தொடர் சோதனை நடத்தினர்.

சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடத்தி வரும் சோதனையில் தற்போது வரை 60 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போலி பத்திரப்பதிவுகள் நடைபெற்று வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பதிவாளர்
அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
BriberyRegistrartirupattur
Advertisement
Next Article