Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"அதிமுக தேர்தல் அறிக்கை பேசுபொருளாக இருக்கும்" - பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் பேட்டி!

01:37 PM Mar 01, 2024 IST | Web Editor
Advertisement

"அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும்" என அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினரான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தனர்.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.  கூட்டணி குறித்தும்,  வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் அதிகரித்த சிறுத்தைகளின் எண்ணிக்கை – கணக்கெடுப்பில் வெளியான தகவல்!

அந்த வகையில்,  முன்னதாக,  அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவும் பிப். 5 ஆம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியது . சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்கள் உள்ளடங்கிய சென்னை மண்டல மக்களை சந்தித்து அதிமுக குழுவினர் கருத்துகளை கேட்டறிந்தனர்.  மேலும் விவசாயிகள் முதல் வெளிநாடு வாழ் தமிழர்கள் வரை தங்கள் கருத்துகளை ஆன்லைன் வழியாகவும், அஞ்சல் மூலமாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை அறிவிக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பொன்னையன்,  நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தனர்.  இது குறித்து அதிமுக தேர்தல் அறிக்கை குழுவினர் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் கூட்டாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது,  சென்னை மண்டலத்தில் இருந்து 512 கோரிக்கை மனுக்ககளும்,  வேலூர் மண்டலத்தில் இருந்து 773 கோரிக்கை மனுக்ககளும் வந்துள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், மொத்தமாக 6,571 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதாகவும்,  இவற்றில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகள் இடம்பெற்றுள்ளதாவும் கூறினர்.

இதையடுத்து,  பிப்.2 முதல் 10ம் தேதி வரை 9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பிரித்து செயலாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினர்.  மேலும், அதிமுக தேர்தல் அறிக்கை பேசும் பொருளாக இருக்கும் எனவும் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
ADMKAIADMKChennaiElection2024LokSabhaElection2024
Advertisement
Next Article