காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் - ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
பெங்களூரில் ஜவுளிக்கடையில் காட்டன் பைக்கு ரூ.29 பணம் வாங்கிய கடை நிர்வாகத்தை ரூ.1,15,029 அபராதமாக வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ஜோதி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள டெக்ஸ் மார்ட் கடையில் ஜவுளி எடுத்துள்ளார். பின்னர் அந்த ஜவுளிகளை கொண்டு செல்லும் கடை விளம்பரம் பதித்த காட்டன் பைக்கு 29 ரூபாய் கடை நிர்வாகம் வாங்கியதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு தகாத முறையில் கடை நிர்வாகம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜகோபால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி கடை நிர்வாகம் காட்டன் பைக்கு வாங்கிய 29 ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு சேமநல நிதிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்கு செலவு தொகை 5000 ரூபாயும் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.