ஆஸ்கர் விருதுக்கான புதிய பிரிவை அறிவித்த அகாடமி!
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்த விருது திரைக் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடத்த 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.
இருப்பினும் இந்த விருகளுக்கான பிரிவில் நீண்ட காலமாக சண்டை பயிற்சி அளிப்பவர்களுக்காக விருது வழங்க ஏற்பாடு வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் அதற்கான அறிவிப்பை தற்போது ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகாடமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சண்டைப் பயிற்சி (ஸ்டன்ட் டிசைனுக்கு) பிரத்யேகமாக ஆஸ்கர் விருதுகளை அகாடமி உருவாக்கியுள்ளது. 2028-ம் ஆண்டு 100வது ஆஸ்கர் விருது விழாவில் அந்த விருது வழங்கப்படும். அந்த விழாவில் 2027-ல் வெளியான படங்களில் சிறந்த ஸ்டன்ட் டிசைன் கொண்ட படத்துக்கு விருது வழங்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.