வினேஷ் போகத்துக்கு எதிராக முதல் WWE வீராங்கனையை களமிறக்கிய #AamAadmi கட்சி!
ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி முதல் WWE வீராங்கனை களமிறக்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் அவரது கணவர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இத்தேர்தலில் போட்டியிட உள்ள 31 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஜூலானா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் மிகத் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் அங்கம் வகித்தது. ஆனால் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இந்தநிலையில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வினேஷ் போகத்திற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் முதல் WWE வீராங்கனையான கவிதா தலாலை களமிறக்கியுள்ளது. எனவே போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள்