For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்" பட்டம் பெற்ற 60 வயது பெண்!

03:00 PM Apr 27, 2024 IST | Web Editor
 மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்  பட்டம் பெற்ற 60 வயது பெண்
Advertisement

60 வயது பெண் ஒருவர் "மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்" பட்டம் பெற்று வரலாறு சாதனை படைத்துள்ளார்.

Advertisement

அழகுப் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது போட்டியாளர்களின் இளமை, வயது,  நிறம் போன்றவைதான்.  வயதைக் கடந்த பிறகு அழகுப் போட்டியில் பங்கேற்பது என்பது அதிகம் பேசப்படாத  ஒன்று.  இந்நிலையில்,  60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : “கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இத்தகைய ஆச்சரியமான சம்பவம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது.  வழக்கறிஞராகவும், பத்திரிக்கையாளராகவும் பணிபுரியும் 60 வயதான Alejandra Marisa Rodriguez அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.  அர்ஜென்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்த இவர், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற Miss Universe Buenos Aires 2024 போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.  அவரது இந்த வெற்றி உலகெங்கிலும் உள்ள பலரை ஊக்கப்படுத்தி உள்ளது.  ரோட்ரிகஸின் வெற்றி வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  60 வயதில் அழகுப் போட்டியில் வென்ற முதல் பெண்மணி இவர்.

மிஸ் அர்ஜென்டினா போட்டி செப்டம்பர் 28 ஆம் திகதி மெக்சிகோவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். முன்னதாக,  உலக அழகி போட்டியில் 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :

இது தனக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.  அழகுக்கு வயது வரம்பு இல்லை,  தடைகளைத் தாண்டி முன்னேற முடியும் என்பதை எல்லாப் பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement