5 நாட்கள் காத்திருப்பு வீண் போகவில்லை! சுருளி அருவியில் இன்று நடந்த அதிசயம்!
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் இன்று அனுமதி அளித்துள்ளனர்.
இதனால், கடந்த ஐந்து நாட்களாக அருவியில் குளிக்க முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால், சுருளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, அருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, வனத்துறையினர் கடந்த ஐந்து தினங்களாக சுருளி அருவியில் குளிப்பதற்குத் தொடர் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி அருவியில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் அளவிற்கு சீரடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இன்று முதல் குளிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
அனுமதி கிடைத்ததும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சுருளி அருவிக்கு வந்து, ஆர்ப்பரிக்கும் நீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த அனுமதி அப்பகுதி சுற்றுலாத் தொழிலையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.