வெளியானது அனிமல் படத்தின் 4வது பாடல்! -இணையத்தில் வைரல்
03:26 PM Nov 18, 2023 IST | Web Editor
Advertisement
அனிமல் படத்தின் 4வது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அதே படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவரின் அடுத்த படமான அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து முடித்துள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த பாடலில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவரும் நெருக்கமானக் காட்சிகளும், முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. டிசம்பர் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது.
Advertisement