தவெக சார்பில் இன்று 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 3 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு தவெக விருது வழங்கும் நிகழ்ச்சியின் 4-வது நிறைவு கட்ட விழா இன்று நடைபெறுகிறது. தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் 39 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழை தவெக தலைவர் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.