'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’ – திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்த பிறகு முதல்முறையாக இந்தக் கூட்டணியின் கூட்டம் நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் கூட்டத்தில், தொகுதி பங்கீடு, பாஜகவை வீழ்த்த புதிய தேர்தல் வியூகங்களை வகுக்க உள்ளனர்.
முன்னதாக, பாட்னா, பெங்களூரு மற்றும் மும்பையில் மூன்று முறை எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.