47-வது சென்னை புத்தகக் காட்சி! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
47-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியை திறந்து வைத்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடனிருந்து புத்தக காட்சியை பார்வையிட்டனர். தொடர்ந்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதன்படி, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகளை கீழ்கண்டவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
- உரைநடை - ஆ. சிவசுப்பிரமணியன்,
- கவிதை - உமா மகேஸ்வரி
- நாவல் - தமிழ்மகன்
- சிறுகதை - அழகிய பெரியவன்
- நாடகம் - வேலு. சரவணன்
- மொழிபெயர்ப்பு - மயிலை பாலு