For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘காட்டாறு... காட்டாறு... காட்டாறு டா... இது தோக்காது டா...’வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் 3-ஆவது பாடல்!

06:30 PM Jul 05, 2024 IST | Web Editor
‘காட்டாறு    காட்டாறு    காட்டாறு டா     இது தோக்காது டா   ’வெளியானது ‘ராயன்’ திரைப்படத்தின் 3 ஆவது பாடல்
Advertisement

‘ராயன்’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘ராயன் RUMBLE’  பாடல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி,  இயக்கி,  நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன்,  சந்தீப் கிஷன்,  காளிதாஸ் ஜெயராம்,  எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  இத்திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நாளை (ஜூலை 6) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ராயன்’ திரைப்படத்தின் அடுத்த பாடலான ‘ராயன் RUMBLE’  பாடல் வெளியாகியுள்ளது.  இந்தப் பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement