For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியனது 'தண்டேல்' படத்தின் 2வது சிங்கிள்!

10:04 PM Jan 04, 2025 IST | Web Editor
வெளியனது  தண்டேல்  படத்தின் 2வது சிங்கிள்
Advertisement

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள 'தண்டேல்' படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது.

Advertisement

அமரன் படத்தைத் தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தண்டேல்'. கார்த்திகேயா 2 திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இந்த படத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி உடன் சந்தீப்வெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

https://x.com/ThandelTheMovie/status/1875546376647667897

சமீபத்தில் வெளியான முதல் பாடலான 'புஜ்ஜி தல்லி' வெளியாகி 40 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி உள்ளது. இந்நிலையில், 2-வது பாடலான 'நமோ நமச்சிவாய' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement