For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது.
07:02 AM Mar 28, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு
Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்குகிறது. இன்று முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த பொதுத்தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 பள்ளி மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தேர்வர்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 48 ஆயிரத்து 426 பேரும், தேர்வு கண்காணிக்கும் பணியில் 4 ஆயிரத்து 858 பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளது.

மேலும் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 858 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Tags :
Advertisement