ஈஸ்டர் பண்டிகையையொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது ஈஸ்டர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது.
இயேசு உயிர்த்தெழுந்த இந்த நாளை தான் கிறிஸ்தவர்கள் ஈஸ்டராக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : ஆவேஷ் கான் அபாரம்… ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
தமிழ்நாட்டிலும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பிராத்தனை செய்தனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 20, 2025
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.