Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய் தலைமையில் இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
07:39 AM Apr 11, 2025 IST | Web Editor
Advertisement

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் நிர்வாக பணிகளுக்காக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அந்த மாவட்டங்களின் பூத் கமிட்டிகளுக்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, மாநில கட்சிகளுக்கு இணையாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டிகளை அமைக்க தவெக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஏப்.11) நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்தவெகnews7 tamilNews7 Tamil UpdatesTamilaga Vettri KazhagamtvkTVK Vijayvijay
Advertisement
Next Article