For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் #Vijay!

03:28 PM Sep 17, 2024 IST | Web Editor
பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தவெக தலைவர்  vijay
Advertisement

பெரியாரின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

Advertisement

சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்குகீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, தவெக தலைவர் விஜயுடன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடனிருந்தார். இந்த நிலையில், இன்று (17.09.2024) தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags :
Advertisement