For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை!

2025 கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
09:51 AM May 30, 2025 IST | Web Editor
2025 கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை
Advertisement

நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். குறிப்பாக தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியருக்கு இந்த ஊக்கத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில் இந்தாண்டு தொகுதி வாரிய அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக 88 தொகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

எப்போதும் போல் மாணவ மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களை  தவெக கட்சி நிர்வாகிகள் வாகன ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். மூன்றாம் ஆண்டாக நடைபெறும் இந்த விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கப்படவுள்ளது.

Tags :
Advertisement