Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அந்த மனசு தான் சார்.. பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்த இண்டிகோ ஊழியர்கள்!

03:57 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருக்க விமான ஊழியர்கள் குடை பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

நாகலாந்தில் உள்ள திமாபூர் விமான நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக இண்டிகோ விமான ஊழியர்கள்,  அவர்களுக்கு குடை பிடித்தவாறு உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இவர்களின் இந்த செயல் மனநெகிழ்வை ஏற்படுத்துவதாக பயனர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 28 ஆம் தேதி இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

க்ளோரியா சங்ராம் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து,  “நான் 28ஆம் தேதி டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது மழை பெய்தது.  நாங்கள் பேருந்து மற்றும் விமானத்திற்குள் நுழைந்த போது இந்த செயல் எனது இதயத்தையும்,  கண்களையும் கவர்ந்தது.  திமாபூர் விமான நிலைய ஊழியர்களின் இந்த நற்செயலுக்காக அவர்களை பாராட்டுகிறேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக அவர்களுக்கு குடை பிடித்து நிற்கும் இவர்களின் இந்த நற்செயல் மனதை கவர்கிறது.

Tags :
Dimapur AirportIndiGo StaffspassengersRainViral
Advertisement
Next Article