”2 வருடங்கள் சினிமாவிலிருந்து விலகியதற்கு அந்த நபர்தான் காரணம்” - உண்மையை போட்டு உடைத்த #Nayanthara
2 வருடங்கள் சினிமாவிலிருந்து விலகியதற்கு அந்த நபர் தான் காரணம் என நயன் தாரா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துவரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளிக்குவித்து இந்தியில் நயன்தாராவுக்கு மாஸ் என்ட்ரியை கொடுத்தது. நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இயக்குநர் விக்னேஷ் சிவனை மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். அப்போது Netflix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு திருமண கிளிம்ஸுடன் வெளியானது. நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் இளம் வயதில் அவர் சந்தித்த வெற்றிகள், துயரங்கள், விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணம் வரை அனைத்தையும் ஆவணப்படமாக வெளியிடவுள்ளதாக தெரிவித்தனர்.
‘Nayanthara Beyond the Fairy Tale’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், நவம்பர் 18ம் தேதி வெளியானது. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவண படத்தை வெளியிட்டது.
இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஆவணப் படத்தில் நயன் தாரா தனது வாழ்வில் அவர் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், மோசமான நாட்கள் என பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
மிக முக்கிய அவர் 2011 முதல் 2013 வரை திரைப்படங்களில் நடிக்காமல் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். இதற்கான காரணத்தை அவர் இதுவரை பொதுவெளியில் எங்கும் சொல்லாமல் இருந்தார். இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தின் மூலம் பேசிய அவர் “ நான் முந்தைய Relatioshipல் இருந்தபோது , அந்த நபர் என்னை சினிமாவிலிருந்து விலகச் சொன்னார். எனக்கு ஒரு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது. அது சினிமாவிலிருந்து விலகுவதான். அப்போது அதனை எதிர்கொள்வதற்கான முறையான பக்குவம் எனக்கு இல்லை.
இரண்டு வருடங்கள் கழித்து என்னை நானே பலப்படுத்திக் கொண்டிருந்தபோது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் இருந்து அழைப்பு வந்தது, ராம ராஜ்ஜியம் படத்தில் சீதாவாக நடிக்க அழைப்பு விடுத்தார். அதன்பின்னர் ராஜா ராணி படத்திற்கான அழைப்பும் வந்தது”என தெரிவித்துள்ளார். நயன்தாரா இந்த பேட்டியில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடவில்லை.