“இப்போது அந்த கட்சி இல்லை” - கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை சாடிய ஆதவ் அர்ஜுனா!
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களின் இரண்டம் நாள் கருத்தரங்கு கோவையில் இன்று (ஏப்.26) நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது அவர் பேசியதாவது, “இந்த மண்ணின் சகோதர்கள் இன்று வந்ததால் கொஞ்சம் உற்சாகம் அதிகம் உள்ளது. கொள்கையால் ,குறிக்கோளால்,நம்பிக்கையாள் ஒவ்வொருத்தரும் இங்கு வந்துள்ளார்கள் காசு கொடுத்து வரவில்லை. 7294 பேர் இங்கு உண்மையாக வந்துள்ளார்கள். இவ்வளவு நாட்களாக கட்சிக்கு கட்டமைப்பு இருக்கிறதா? என்றார்கள். இதோ பாருங்கள் கோவையை இரண்டு நாட்களாக அதிர்ந்து உள்ளது.
பத்திரிக்கையாளர்கள் போர்வையில் டிவி விவாதத்தில் திமுக ,அதிமுக-வைப் பற்றி பார்த்து ,பார்த்து தெரிந்தவர்களுக்கு எப்படி எங்களின் புதிய வியூகம் எப்படி தெரியும். சென்னையில் உள்ளவர்கள் எப்படி தெரியும். கோட்டையில் உள்ளவர்கள் இங்கு நீங்கள் ஒலிக்கும் சத்தம் போதும். தவெக தான் வஃக்பு சட்டத்திற்க்கு எதிராக முதல் முதலாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இங்கு கபட நாடகம் ஆட்சி உள்ளது. அவர்கள் வஃக்பு சட்டத்திற்க்கு எதிராக ஏன் உச்சநீதிமன்றத்தில் வாதடவில்லை?
தமிழ்நாட்டில் உண்மையான எதிர்கட்சி தலைவர் தவெக தலைவர் தான். வருகின்ற 10 மாதத்தில் மிகப்பெரிய எதிர்கட்சி தலைவரை நீங்கள் பார்ப்பீர்கள். உங்களின் கபட நாடகத்தை நாங்கள் தோலுறித்து காட்டுவோம். ஏன் வரவில்லை என்று கேட்டீர்கள் இதோ வந்துவிட்டார். எங்கள் தலைவரின் பாதுகாப்பை நாங்கள் பாத்துகொள்வோம். மக்களின் பாதுகாப்பை நீங்கள் பார்த்துகொள்ளுங்கள். இல்லையெனில் அது மூலம் நீங்கள் பண்ணும் சூழ்ச்சி எங்களுக்கு தெரியும்.
பார்ப்போம் கள்ள ஓட்டு போட ஆளுங்கட்சி ரெடியாக இருப்பார்கள். நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுத்தால் உடனடியாக வழக்கறிஞர்கள் வருவார்கள். வாக்குசாவடி முகவர்கள் உண்மையான வலிமையை புரிந்து கொள்ளுங்கள்” தொடர்ந்து அவர் கோவை தெற்கில் ஒரு பூத் குறித்து விளக்கிய போது மக்கள் நீதி மய்யம் வாங்கிய வாக்கு சொன்ன போது, “சாரி மன்னித்து விடுங்கள். இப்போது அந்த கட்சி இல்லை” என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை சாடினார். அந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர் பேசியபோது, நாம் ஒவ்வொரு பூத்திலும் 350 ஓட்டு வாங்கினால் போதும் நாம் தான் ஆளுங்கட்சி. நமக்கு எதிராக தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் பொய் பிரச்சாரம் நடந்து கொண்டுக்கிறது. என்னுடைய தேர்தல் பணி அனுபவத்தில் நான் சொல்கிறேன். விசிகவும் ,கம்யூனிஸ்ட் கட்சியும் எந்த செலவும் செய்யாமல் வெற்றி பெற்றார்கள். காசு இருந்தால் வெற்றி பெறலாம் என்று சொல்வார்கள். ஒரு உண்மையான தலைவர் புதிதாக வந்துவிட்டார் என்று சொன்னால் போதும். மக்கள் சந்திப்புபோது வருகின்ற ஜனவரியில் முதன்மை கட்சியாக 40 லிருந்து 50 சதவீதம் சர்வே ரிப்போட்டில் விஜய் இருப்பார். அந்த அளவிற்கு நமக்கு வலிமை உள்ளது”
இவ்வாறு