#Tharunam திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!
கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தருணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
'முதல் நீ முடிவும் நீ' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் கதாநாயகனாக அறிமுகமான கிஷன் தாஸ். பள்ளிபருவ காதலை மையப்படுத்தி உருவான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகுந்த கவனம் பெற்றன. குறிப்பாக 'முதல் நீ முடிவும் நீ' என்ற பாடல் இப்படம் வெளியான சமயத்தில் டிரெண்டிங்கில் இருந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த காதல், நட்பு தொடர்பான காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன.
தற்போது அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தருணம்' என்ற திரைப்படத்தில் கிஷன் தாஸ் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர்ம முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
We’re here an hour early 😂
Watch the TRAILER of Tharunam, coming to screens near you on the 14th of Jan. I’ve always believed that a trailer speaks best, so if you like this, you’ll like our film.Do give us your feedback and help spread the word!https://t.co/DCw8LiLJ7T pic.twitter.com/KKV6ufhhMd
— Kishen Das (@kishendas) January 7, 2025
இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 14 ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 'என்னை நீங்காதே நீ' என்ற பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இப்பாடலை மதன் கார்கி வரிகளில் கபில் கபிலன் மற்றும் பவித்ரா சாரி இணைந்து இப்பாடலை பாடியிருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.