Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தஞ்சையில் ஆசிரியை கொலை | "குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்!

01:28 PM Nov 20, 2024 IST | Web Editor
Advertisement

தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பெய்யாமொழி தெரவித்தார்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர்
முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்
பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் (30) .
இவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரமணியை பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனை
திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மதன் இன்று (நவ.20) காலை ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்
கொண்டு இருந்த போது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்து பகுதியில் மதன்
கத்தியால் குத்தினார்.

இதையும் படியுங்கள் : “அற்புதமான முயற்சி” – கங்குவா படத்தை பாராட்டிய நடிகர் மாதவன்!

இதில் ரமணி மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி உயிரிழந்தார்.இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியையை ரமணி குத்திக்கொலை செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்:

" தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

https://twitter.com/Anbil_Mahesh/status/1859125852250010017

Tags :
AnbilMageshCrimeMinisterNews7Tamilnews7TamilUpdatesstaffteacherthanjaiThanjavurTNPolice
Advertisement
Next Article