Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thangalaan ரிலீஸ் - நெல்லையில் விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம்!

12:04 PM Aug 15, 2024 IST | Web Editor
Advertisement

விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் மூன் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில்,  சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் வெளியானதை கொண்டாடும் வகையில் திருநெல்வேலியில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ராம் முத்துராம் திரையரங்கு முன்பு ஒன்றாக கூடி மேள தாளத்துடன், ஆட்டம் பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பட்டாசு வெடித்து வண்ண புகைகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பால்குடம் எடுத்து வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதனையடுத்து ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

Tags :
Actor vikramCelebrationfansGV PrakashPa. RanjiththangalaanvikramVikram Fans
Advertisement
Next Article