தாமிரபரணியில் அதிகரிக்கும் நீர்வரத்து - கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதன் காரணமாக கரையோர பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து தற்போது தாமிரபரணி ஆற்றிற்கு 5,400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : இஸ்ரேல் – ஹமாஸ் போர் : காஸாவில் 17,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை..!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம். மேலும், ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது" என தெரிவித்தார்.