For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து பிரபலங்களை களமிறக்கும் #Thalapathy69... இப்போது யார் தெரியுமா?

01:13 PM Oct 03, 2024 IST | Web Editor
தொடர்ந்து பிரபலங்களை களமிறக்கும்  thalapathy69    இப்போது யார் தெரியுமா
Advertisement

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இன்று வெளியானது. கோட் படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும். ‘தளபதி 69’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் முதல் வெளியாகி வருகிறது. இதுவரை இப்படத்தில் நடிகர் பாபி தியோல், நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகை மமிதா பைஜு ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக ‘தளபதி 69’ அறிவித்துள்ளது.

Tags :
Advertisement