‘தல கிங்குடா’ - 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது #GBU டீசர்!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று (பிப். 28) வெளியானது. இந்த டீசரில் அமர்களம், பில்லா தோற்றங்களில் அஜித் காட்சியளித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால், எதிர்பார்த்ததைவிட குட் பேட் அக்லி டீசர் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த நிலையில், டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 3.1 கோடி (31 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. மேலும், நடிகர் அஜித் நடித்த படங்களிலேயே இதுவே மிக விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி பெற்றுள்ளது. இதனை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Darlings missed you all 🔥❤️🙏🏻#GoodBadUglyTeaser AK Sir’s RECORD BREAKING SAMBAVAM 🔥 pic.twitter.com/0u5ajv8M1N
— Adhik Ravichandran (@Adhikravi) March 1, 2025
https://www.youtube.com/watch?v=jl-sgSDwJHs