For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'தக் லைஃப்' படத்தில் இணையப்போவது யார்? - மே 8ல் வெளியாகிறது அப்டேட்!

06:47 PM May 06, 2024 IST | Web Editor
 தக் லைஃப்  படத்தில் இணையப்போவது யார்    மே 8ல் வெளியாகிறது அப்டேட்
Advertisement

கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’  படத்தின் புதிய அப்டேட் மே. 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் நடிக்கவிருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகியதாக தகவல்கள் வெளியாகின. இவர்களுக்கு பதில் துல்கர் கதாபாத்திரத்தில்  நடிகர் சிம்புவும், ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய்யும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் படக்குழு ஒரு புதிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் புதியதாக படத்தில் ஒருவர் இணைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மே. 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement