தைப்பூசத் திருநாள் - தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நேற்று (பிப். 10) முதலே அதிகரிக்க தொடங்கிவிட்டது.
தைமாதம் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று கூடும் நாளில் தைப்பூசம் திருவிழா கொண்டாப்படுகிறது. அதுவும் இந்தாண்டு முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை வருவது கூடுதல் சிறப்பு என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தை பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.