For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தாய்லாந்து-கம்போடியா மோதல் : இந்தியர்கள் கம்போடியாவுக்கு செல்ல வேண்டாம் என்று தூதரகம் அறிவுறுத்தல்!

தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதல் காரணமாக இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
07:22 AM Jul 27, 2025 IST | Web Editor
தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதல் காரணமாக இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து கம்போடியா மோதல்   இந்தியர்கள் கம்போடியாவுக்கு செல்ல வேண்டாம் என்று தூதரகம் அறிவுறுத்தல்
Advertisement

தாய்லாந்து-கம்போடியா இடையே பயங்கர மோதல் காரணமாக இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது.

Advertisement

இதன் காரணமாக எல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஐ.நா.சபை இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே எல்லை பகுதியில் போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

இதனால் இந்தியர்கள் யாரும் தாய்லாந்து செல்ல வேண்டாம் என தூதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியர்கள் கம்போடியாவுக்கும் செல்ல வேண்டாம் என தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் அங்கு வசிக்கும் இந்தியர்கள் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் 855 92881676 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்றும் cons.phnompenh@mea.gov.in. என்ற இமெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement