Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜவுளி உற்பத்தியாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம்..!

07:56 AM Nov 06, 2023 IST | Web Editor
Advertisement

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்பும்,தினமும் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிப்பும் ஏற்படும்.

இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் 2 லட்சம் விசைத்தறி தொழில் கூடங்கள் உற்பத்தியை நிறுத்தி ஈடுபடுவதால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு மின்சார மானியம் ,புதிய ஜவுளி கொள்கை அறிவிக்க வேண்டும்.
வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து குறைந்த விலையில் ஜவுளிகள் இறக்குமதி செய்யப்படுவதால் உள் நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  மற்ற மாநிலங்களில் புதிய ஜவுளி கொள்கை, மின்சார மானியம் போன்றவைகளால் ஜவுளி உற்பத்தி செலவு நமது மாநிலத்தை விட குறைவாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்களுடன் போட்டி போட இயலாது நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  திருப்பூர், கோவை மாவட்டத்தில் உற்பத்தியான ஜவுளிகள் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தேக்கம் ஏற்பட்டுள்ளதால் வருகிற 25ஆம் தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர், கோவை மாவட்டத்தில் அதிக அளவிற்கு ஜவுளிகள் தேக்கம் ஏற்படும்.

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இந்த உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது வருகிற 25ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு பிறகு மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Tags :
manufacturingmanufacturing companyTextileTExtile IndusriesTirupur
Advertisement
Next Article