பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்தின் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும் - இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்!
பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான சோதனைகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவின் ஃபரீதாபாதில் நடைபெறும் சர்வதேச இந்திய அறிவியல் விழாவில் இஸ்ரோ தலைவர் சோமநாத் பங்கேற்றார். அப்போது, இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்தித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிலையம் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், "பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கான முதல் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும். இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தின் கட்டமைப்பு தொடர்பாக அண்மையில் ஆய்வு நடத்தினேன். இதன் தயாரிப்பு, சோதனைகள் குறித்து தொழில்துறையினருடன் இஸ்ரோ பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. மேலும், மனிதர்கள் யாருமின்றி இந்த விண்வெளி ஆய்வு நிலையம் செயல்படும்.
இதையும் படியுங்கள் : சபரிமலை சீசன் நெய்யபிஷேக பூஜையுடன் இன்று நிறைவு..!
இதையடுத்து, வெள்ளி கிரகத்துக்கான திட்டம் ஏற்கெனவே திட்டமிட்டது. அதற்கான செலவுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இஸ்ரோக்கான முக்கிய இலக்குகளை பிரதமர் நிர்ணயித்துள்ளார். அதனால், இந்த வெள்ளி கிரக ஆய்வுக்கான திட்டம் செலுத்தப்படும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க இயலாது' என்றார்.
அதனைத்தொடர்ந்து, அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் புதிய ராக்கெட்டை தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருவதாக சோமநாத் தெரிவித்தார்.