Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி | சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்!

09:54 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

Advertisement

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடிய நிலையில் விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 57 ரன்களுடனும், பென் டக்கெட் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

தொடர்ந்து, ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் எடுத்து 3 வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த வீரர்கள்:

மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்)                        21 பந்துகளில்

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)                      23 பந்துகளில்

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)                        24 பந்துகளில்

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)                   24 பந்துகளில்

ஷேன் ஷில்லிங்ஃபோர்டு (மே.இ.தீவுகள்)      25 பந்துகளில்

Tags :
#SportsBen stokesCricketENG Vs WIENGLANDTest Cricketwest indiesWI vs ENG
Advertisement
Next Article