Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி - தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் முன்னிலை !

08:08 AM Dec 08, 2024 IST | Web Editor
Advertisement
Advertisement

இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3ம் நாள் டெஸ்ட் போட்டியின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது .

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனை அடுத்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 89 ரன்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் வெர்ரைன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணியில் உள்ள லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 32 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக டோனி டி ஜோர்ஜி மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோர் களம் இறங்கிய நிலையில் டோனி டி ஜோர்ஜி 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ரியான் ரிக்கெல்டன் 24 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது .

Tags :
CricketSouth AfricaSri LankaTest Cricket
Advertisement
Next Article