For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றி!

09:49 PM Apr 29, 2024 IST | Web Editor
அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றி
Advertisement

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த அரோரா இன்னோவேஷன் என்ற நிறுவனம் ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் இறங்கியது. அதன்படி, 80,000 பவுன்ட் எடை கொண்ட கனரக வாகனத்தை நெடுஞ்சாலைகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அந்நிறுவனம் சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

இதில், 400 மீட்டருக்கு முன்பு வாகனங்கள் அல்லது ஏதேனும் தடுப்பு தென்பட்டால், கனரக வாகனம் தானாக மாற்று பாதையை தேர்வுசெய்துகொள்ளும். நெடுஞ்சாலைகளில் உள்ள மூன்றுவழிச் சாலைகளில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ரேடார், கேமரா சென்சார், 25 லேசர் மூலம் தானியங்கி முறை சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி – டாஸ் வென்று டெல்லி அணி பேட்டிங் தேர்வு!

தலாஸ் முதல் ஹுஸ்டன் வரை 20 தானியங்கி கனரக வாகனங்கள் முதல்கட்டமாக இயக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உடன் ஒரு நபரும் அனுப்பப்பட்டனர். இந்த சோதனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது. கனரக வாகனங்களை தானியங்கி முறையில் இயக்குவதால், பெருமளவு எரிபொருள் சேமிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement