சிட்னியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் சுட்டுக் கொலை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போன்டி கடற்கரை அருகே மிகப் பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று அந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது. அதில் 4 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “பெண்களை அவமதிக்கும் செயலை பிரதமர் மோடி செய்யமாட்டார்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
பாதுகாப்பு நடவடிக்கையாக, வணிக வளாகத்திலிருந்த பலரும் பாதுகாப்பாக வெளியற்றப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என அங்கிருந்து வரும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலையுடன் சேர்த்து அணியப்படும் ஹூடி போன்ற ஆடையை அணிந்துகொண்டிருந்த கொலையாளி தனது கையில் கத்தியை வைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டித் தாக்கியதாக, நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.
இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். பலரும் கடைகளுக்குள் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கி இருக்கிறார்கள். மேலும், சில தகவல்கள், அந்த நபரே கையில் துப்பாக்கியையும் வைத்திருந்ததாகவும் கண்மூடித்தனமாக அங்கிருந்தவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.