VIT-ல் பயங்கரவாத தாக்குதலா? - வைரலான வீடியோவின் பின்னணி என்ன?
This News Fact Checked by ‘ PTI ‘
தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான வேலூர் தொழில்நுட்பக் கழகம் (விஐடி) வளாகத்தில் ஆயுதம் ஏந்திய முகமூடி அணிந்த ஒரு குழு குண்டுவெடிப்பு நடத்துவதாக ஒரு காணொலியை பல சமூக ஊடக பயனர்கள் சமீபத்தில் பகிர்ந்தனர். இந்த காணொலியில், ஆயுதம் ஏந்திய நபர்கள் பல்கலை. வளாகத்திற்குள் ஓடி, வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து ஒரு முக்கிய கட்டிடத்திற்குள் நுழைவதை காட்டியது.
இருப்பினும், பிடிஐ உண்மைச் சரிபார்ப்பு டெஸ்க் இதுகுறித்து விசாரித்ததில் இந்தக் கூற்று தவறானது என்று கண்டறிந்தது. இந்த வீடியோ மார்ச் 2, 2025 அன்று விஐடி வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) நடத்திய ஒரு விழிப்புணர்வு பயிற்சியைக் காட்டுகிறது. இந்த நிகழ்வு குண்டுவெடிப்பு போன்ற அச்சுறுத்தல் ஏற்பட்டால் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பயிற்சியின் ஒரு பகுதியாகும். ஆனால் இந்த வீடியோ தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
வைரல் கூற்று :
வேலூர் தொழில்நுட்பக் கழகத்தின் (VIT) பல்கலைக்கழக வளாகத்தில் ஆயுதமேந்திய ஒரு குழு திடீர் குண்டுவெடிப்புகளை நடத்தியதாகக் கூறப்படும் ஒரு காணொலியை ஒரு X பயனர் மார்ச் 2 அன்று பகிர்ந்தார். அந்த காணொலியில், முகமூடி அணிந்த ஆயுதமேந்திய நபர்கள் பல்கலை. வளாகத்திற்குள் ஓடி, பிரதான கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதைக் காட்டியது. அந்த இடுகைக்கான இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, ஒரு ஸ்கிரீன்ஷாட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு :
பிடிஐ டெஸ்க் இன்விட் கருவி மூலம் வைரலான வீடியோவை இயக்கி, பல கீஃப்ரேம்களைப் பிரித்தெடுத்தது. பின்னர் கூகுள் லென்ஸ் மூலம் கீஃப்ரேம்களில் ஒன்றை இயக்கியபோது, பல பயனர்கள் ஒரே வீடியோவைப் பகிர்ந்துள்ளதை டெஸ்க் கண்டறிந்தது. அத்தகைய இரண்டு இடுகைகளை இங்கே மற்றும் இங்கே காணலாம் , அவற்றின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் முறையே இங்கே மற்றும் இங்கே காணலாம்.
மேலும் தேடல் முடிவில் மார்ச் 3, 2025 அன்று 'ஷ்ரத்தா - தி ஃப்ரஸ்ட்ரேட்டட் ஹுமன்' என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவையும் டெஸ்க் கண்டது. அந்த வீடியோவில் வைரலான பதிவின் காட்சிகள் இருந்தன. இருப்பினும், இது விஐடி வேலூர் வளாகத்தில் தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) நடத்திய ஒரு பயிற்சி என்பதை தெளிவுபடுத்தும் தலைப்புடன் பகிரப்பட்டது. இந்தப் பதிவின் இணைப்பு மற்றும் காப்பக இணைப்பு, ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே :
வைரல் வீடியோவில் உள்ள உள்ளடக்கம் மார்ச் 3, 2025 அன்று வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவுடன் பொருந்துகிறது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கூட்டுப் படம் கீழே உள்ளது.
விசாரணையின் அடுத்த பகுதியில், மேலே உருவாக்கப்பட்ட உள்ளீடுகளிலிருந்து குறிப்புகளைப் பெற்று, டெஸ்க் கூகுளில் தனிப்பயனாக்கப்பட்ட முக்கிய வார்த்தை தேடலை நடத்தியது. அதன் முடிவில் மார்ச் 2, 2025 அன்று தி இந்து வெளியிட்ட ஒரு அறிக்கையை டெஸ்க் கண்டது.
அறிக்கையின் Feature Image உண்மை சரிபார்ப்புக்கு பயன்படுத்திய கீஃப்ரேம்களுடன் பொருந்தினாலும், அறிக்கையின் விவரங்கள், பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒத்திகை பார்க்க விஐடி வேலூர் பல்கலை. தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) நடத்திய பயிற்சியின் வீடியோ என்பதை வெளிப்படுத்தின. அறிக்கைக்கான இணைப்பு , ஸ்கிரீன்ஷாட்டுடன் இங்கே :
முடிவு :
விஐடி வேலூர் வளாகத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாதிரிப் பயிற்சியின் காணொலி, மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் தவறான கூற்றுடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதாக டெஸ்க் முடிவு செய்தது.
Note : This story was originally published by ‘ PTI ‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.