டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!
டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக டிரினிடாட் நாட்டின் பிரதமர் கீத் ரௌலி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.
இது தொடர்பாக அவர் பேசியதாவது,
“அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. போட்டியை நடத்துபவர்கள் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். துரதிருஷ்டவசமாக, 21ம் நூற்றாண்டில் பயங்கரவாதம் வெவ்வேறு விதமாக அனைத்து இடங்களிலும் இருக்கிறது” என்றார்.