Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தானில் பயங்கர சாலை விபத்து ; 14 பேர் பலி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி ஒன்று லாரி, கட்டுப்பாட்டை மீறிச் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:00 PM Nov 03, 2025 IST | Web Editor
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சரக்கு லாரி ஒன்று லாரி, கட்டுப்பாட்டை மீறிச் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள ஹர்மதா என்ற இடத்தில் சரக்கு லாரி ஒன்று லாரி, கட்டுப்பாட்டை மீறிச் சென்றதில் அடுத்தடுத்து 17 வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்  சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர், அவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  முதல்வர் பஜன்லால் சர்மா, ஒரு பசுமை வழித்தடத்தை உருவாக்கி காயமடைந்தவர்களை அருகிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ள  இரங்கல் பதிவில்,

”ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மராவின் லோஹா மண்டி பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிர் இழப்பு மிகவும் துயரமானது மற்றும் வேதனையானது. காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இறந்த ஆன்மாக்களுக்கு நித்திய இல்லத்தில் இடம் அளிக்கவும், துயரமடைந்த குடும்பங்களுக்கு இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை வழங்கவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Tags :
IndiaNewsJaipurlatestNewslorryaccidentrajastan
Advertisement
Next Article