திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து!
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இதன் காரணமாக ஆயில் டேங்கர்கள் முழுவதும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் போல காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராடினர். இதனிடையே அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. மேலும் தீ விபத்து காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை வரை காஞ்சிபுரம் செங்கல்பட்டு தாம்பரம் வழியாக செல்லும் மின்சார ரயில் மூலமாக சென்னை செல்ல பலரும் முண்டியடித்துக் கொண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது