For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து! பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு!

03:18 PM Jun 10, 2024 IST | Web Editor
உத்தரப்பிரதேசத்தில் கோர விபத்து  பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய 4 யூடியூபர்கள் உயிரிழப்பு
Advertisement

பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் 4 யூடியூபர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (09.06.2024) இரவு பயங்கர விபத்து ஏற்பட்டது.  Round2World Official என்ற யூடியூப் சேனலை வழிநடத்துபவர்களின் ஓருவரின் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் நேற்று இரவு கலந்து கொண்டனர்.

அதன் பின்னர், திரும்பி வந்து கொண்டிருந்தபோது அம்ரோஹா பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.  மேலும் இந்த பயங்கர விபத்தில் லக்கி சவுத்ரி,  சல்மான்,  ஷாருக் மற்றும் ஷாநவாஸ் ஆகிய 4 யூடியூபர்கள் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக அங்கு இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள் : “மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மேலும், இரண்டு கார்கள் மோதியதில் 6 பேர் காயமடைந்துள்ளதும், 4 பேர் உயிரிழந்துள்ளதும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement