For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#2025IPL மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்!

01:53 PM Sep 29, 2024 IST | Web Editor
 2025ipl மெகா ஏலத்திற்கான விதிமுறைகள்
Advertisement

ஐபிஎல் 2025 தொடருக்காக ஒவ்வொரு அணியும், ஒரு அன்-கேப்ட் பிளேயர் உட்பட 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் தக்கவைப்பு விதிகளை அறிவித்தது. அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணி உரிமையாளர்கள்,  தங்கள் அணியிலிருந்து விடுவிக்க உள்ள மற்றும் தக்கவைக்க உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது.  மெகா ஏலத்திற்கு முன்னதா,  நேரடித் தக்கவைத்தல் அல்லது ரைட்-டு-மேட்ச் கார்டு மூலம் அதிகபட்சமாக, ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு அணி நிர்வாகம் ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், முதல் மூன்று வீரர்களுக்கு முறையே ரூ. 18 கோடி, ரூ. 14 கோடி மற்றும் ரூ. 11 கோடி செலவாகும். அடுத்த இரண்டு விரர்களுக்கு ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடியை இழக்க நேரிடும். அதன்படி, ஐந்து வீரர்களைத் தக்கவைத்தால், ஒரு அணி ஏலத்தின் போது ரூ.45 கோடியை மட்டுமே கைவசம் வைத்திருக்கும். எனவே, அனைத்து அணிகளும் 6 வீரர்களை தக்கவைப்பது என்பது சந்தேகம் தான்.

Tags :
Advertisement