For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார்!

06:53 PM Aug 02, 2024 IST | Web Editor
டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார்
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக்கில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்துள்ளார்.

Advertisement

முன்னாள் உலக நம்.1 டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதாகும் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி முர்ரே இரண்டு முறை (2012, 2016) ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார். 2012இல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றுள்ளார். விம்பிள்டன் போட்டியில் 2013, 2016 ஆண்டுகளிலும் 2012 அமெரிக்க ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அறுவைச் சிகிச்சை காரணமாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் இருந்து விலகிய ஆன்டி முர்ரே கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டுமே கலந்துகொண்டார். தற்போது பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் டான் இவான்ஸ் உடன் சேர்ந்து டெய்லர், டாமி பால் இணையுடன் மோதினார். இதில் 2-6, 4-6 என செட்களில் ஆன்டி முர்ரே இணை தோல்வியுற்றது.

இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில், “இனிமேல் டென்னிஸை விரும்பப்போவதில்லை” எனக் கூறியுள்ளார். மேலும் தனது பயோவில், “டென்னிஸ் விளையாடினேன்” எனவும் மாற்றியுள்ளார்.

பார்வையாளர்களிடம் இருந்து பலத்த கரகோஷம் கிடைத்தது. மக்களுக்கு நன்றி தெரிவித்து கையசைக்கும்போது ஆன்டி முர்ரேவின் கண்களில் கண்ணீர் கசிந்தது. தோல்விக்குப் பிறகு, “ இது சிறப்பான முடிவில்லை. பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நான் சிறப்பாகவே உணர்கிறேன். போட்டி முடிந்த விதம் எனக்கு மகிழ்ச்சியே. ஒலிம்பிக்கில் பங்கேற்று எனது விருப்பப்படியே முடிந்தது மகிழ்ச்சி. ஏனெனில் கடைசி சில வருடங்களில் எதுவும் நிரந்தரமாக இருக்கவில்லை. இவ்வாறு ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement