வார விடுமுறை – சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் குற்றாலம்!
வார விடுமுறை தினத்தையொட்டி குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில்
சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஒரு
வார காலத்திற்குப் பிறகு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து
காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த வாரம் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த 4ம் தேதி முதல் நேற்று வரை குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது வெகுவாக குறைந்தே காணப்பட்டு வந்தன.
இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாட ஏராளமான
சுற்றுலாப் பயணிகள் தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை
தந்து குடும்பங்களுடன் ஆனந்த குளியலிட்டுவரும் நிலையில், குற்றாலம் பகுதியில்
உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி,
புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம்
என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!
மேலும், தற்போது குற்றாலம் பகுதியிலுள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு
பணியில் அமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.