தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்..!
தொடர் விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளின் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் வருடம்
தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன் நிலவுவது வழக்கம். குறிப்பாக, மழைக்கால சீசன் மற்றும் மற்றொன்று சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன். இந்த இரண்டு சீசனும் இந்த வருடத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது குற்றாலம் அருவியில் லேசாக தண்ணீரானது கொட்டி வருகிறது.
இதையும் படியுங்கள் ; நட்சத்திர ஓட்டல் லிப்டில் சிக்கிய மேற்கு வங்காள கால்பந்து வீராங்கனைகள் – பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் முடிவடைந்துள்ளது. தொடர் விடுமுறை தினத்தையொட்டி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். மேலும், மழையானது தற்போது முற்றிலும் குறைந்துள்ள சூழலில் குற்றால அருவிகளில் லேசாக கொட்டி வரும் தண்ணீரில் குளியலிடுவதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளின் அதிகளவில் வந்திருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.